இன்று தமிழக முதல்வர் கன்னியாகுமரியில் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை துவக்கி வைத்த நிலையில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் இன்று டிசம்பர் 30 கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி IAS, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, மற்றும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இதில், கல்லூரி மாணவிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டது. மேலும், இந்த புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் ஏராளமான மாணவிகள் பலர் பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கல்லூரி பேராசிரியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.