தர்மபுரி: பென்னாகரம் வட்டாரத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை

78பார்த்தது
தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக பல்வேறு பகுதியில் மழை பொழிந்து வரும் சூழலில், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஒகேனக்கல், பெரும்பாலை, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இதனால் பயிர் நடவு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி