தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கோவை மண்டல அளவிலான அஞ்சல் மக்கள் குறைதீர் கூட்டம், அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கோவை, கே. பி. காலனி தபால் நிலைய வளாகம், கோவை என்ற முகவரியில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. நுகர்வோர் அஞ்சல் துறை சார்ந்த குறை ஏதேனும் இருப்பின், தபால் மூலம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறைதீர் கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். நுகர்வோர் தங்கள் மனுசார்ந்த அனைத்து விவரங்களையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். கடிதத்தின் மேல் மக்கள் குறைதீர் கூட்டம் என்று குறிப்பிடவும். மனுவை தொழில்நுட்ப உதவி இயக்குநர் (தபால் மற்றும் தொழில்நுட்பம்), அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், தமிழ்நாடு, கோவை -641030 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மனுக் கள் வந்தடைய வேண்டிய கடைசி நாள் வரும் 17ம்தேதி ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.