தருமபுரியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் தற்போது இளநிலை பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 4-ந் தேதி மற்றும் 5, 6 ஆகிய மூன்று நாட்களுக்கு இளநிலை பட்டப்படிப்புகான 1-ம் கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை இன்று நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நாளை 6-ந்தேதி இயற்பியல், வேதியியல், கணிதவியல், விலங்கியல், தாவரவியல். கணினி அறிவியல், கணினி பயன்பாடு, மின்னணுவியல், காட்சிவழித் தொடர்பியல், உளவியல்ஆடை வடிவமைப்பியல், புள்ளியியல் ஆகிய பாட பிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது
சேர்க்கையின் போது மாணவர்கள் விண்ணப்பப் படிவம், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்கள் பட்டியல், சாதிசான்றிதழ் அசல், மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு ரூ. 2980-அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ரூ. 3 ஆயிரத்தையும், பி. காம் (சி. ஏ). , பி. எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி. சி. ஏ. பாடபிரிவுகளுக்கு ரூ. 2100-யையும் சேர்க்கை கட்டணமும் எடுத்து வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு www. gacdpi. ac. in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.