தர்மபுரி: வெயிலின் தாக்கத்தால் விவசாயி உயிரிழப்பு

84பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி எடுத்து எட்டயாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி தர்மன் இவர் கறவை மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றார் இந்த நிலையில் நேற்று நண்பகல் பாலக்கோடு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில் வெகு நேரம் ஆகியும் வராததை அடுத்து அவரது மனைவி கணவன் தர்மனை தேடி சென்ற போது தொட்டலாம்பட்டி பகுதியில் உள்ள சாலையோரம் தருமன் மயங்கி கிடந்துள்ளார் இது குறித்து உடனடியாக கோவிந்தம்மாள் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் காவலர்கள் தர்மனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெயிலின் தாக்கத்தால் தருமன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி