தர்மபுரி: மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

72பார்த்தது
தர்மபுரி: மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம். மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்ததாவது, தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் நடைபெறாதவாறு தடுக்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் பாலியல் குற்றங்கள் தடுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவது முன்கூட்டியே கண்டறியப்பட்டு அத்திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்த தகவலை 1098 என்ற எண்ணிற்கு தெரிவிக்க வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் அருகில் போதைப் பொருட்கள் விற்பதை கண்காணிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி