இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சதீஷ் தர்மபுரி வருவான் வடிவேலர் கல்லூரி தலைவர் வடிவேல் செயலாளர் மாது கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் கல்லூரி மாணவ மாணவிகளிடம் சமூக வலைத்தளங்களில் முகவரி தொலைபேசி எண் போன்றவற்றை கேட்டால் பதிவு செய்ய வேண்டாம் வங்கியில் பரிவர்த்தனைக்காக தங்களின் ஏடிஎம் கார்டில் உள்ள எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் இமெயில் உள்ளிட்டவைகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். அப்போது சைபர் குற்றங்கள் குறித்த உதவி எண் 1930 என்ற எண்ணை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாணவ மாணவிகள் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.