தர்மபுரி: பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

69பார்த்தது
வைகாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 10) தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு கிரிவலம் செல்வதற்காக பிற்பகல் ஒரு மணி முதல் தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட புறநகர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். 

தொடர்ந்து ஏராளமான பயணிகள் வருகை தந்ததை அடுத்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் தர்மபுரி புறநகர் பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் அலைமோதியது. இதனைத் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு பணிகளில் நகர காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி