தர்மபுரி: எம்எல்ஏ தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா

69பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இந்த நிகழ்வில் கர்ப்பிணி பெண்கள் உணவு உண்ணும் முறை மற்றும் எளிய முறையிலான உடற்பயிற்சி என்பது குறித்து மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள் இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி அளவில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு எம்எல்ஏ மற்றும் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவத்தில் தாயும், சேயும் நல்ல முறையில் இருக்க வேண்டுமென பென்னாகரம் எம்எல்ஏ ஜி கே மணி வாழ்த்தினார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது அதன் தொடர்ந்து அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி