தர்மபுரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கிய ஆட்சியர்

78பார்த்தது
தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு பாடநூல்கள், சீருடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் அங்ன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் போது தமிழ்நாடு அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை பள்ளிக் கல்வி துறை மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்க வழங்கி வருகிறது. இதை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும். மாணவர்கள் சிறந்த கல்வி பயில்வதில் ஆசிரியர் பெருமக்களுக்கும் முக்கிய பங்குள்ளது. தற்போதிய நவீன காலக் கட்டத்தில் ஆசியர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கல்வியாண்டில் முதல் நாளில் பள்ளிக்கு வருகை புரிந்துள்ள மாணவ மாணவிகளுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி