தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் "பெண் குழந்தைகளை பாதுகாப்போம்" "பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற தலைப்பு அடங்கியுள்ள ஸ்டிக்கரை பேருந்துகளில் மற்றும் ஆட்டோகளில், ஓட்டுநர் பயிற்சி வாகனத்திலும் ஒட்டி பொது மக்களிடம் 18 வயது நிறைவடையாத பெண் மற்றும் 21 வயது நிறைவடையாத ஆண் ஆவிகளுக்கு திருமணம் செய்வது குழந்தைகள் திருமணம் ஆகும், 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கு திருமணம் செய்யும் இப்பொழுது கருவுறுதல் நிலை ஏற்படும் ஆனால் இளம் வயது என்பதால் கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாததின் காரணமாக அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புண்டு என பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில் அரசு அலுவலர்கள், வட்டார போக்குவரத்துத் துறையினர், டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.