தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் மாநில, மத்திய செயற்குழு கூட்டம் இன்று தர்மபுரியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். மாநில பிரசார செயலாளர் அண்ணா துரை வரவேற்றார். மாநில பொது செயலாளர் நடராஜன், முன்னாள் மாநில தலைவர் தண்டபாணி, அரசு அலுவலர் ஒன்றிய தர்மபுரி மாவட்ட தலைவர் குமார் முன்னிலை வகித்தனர். அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் துரைப் பாண்டி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், 2023- 24ம் ஆண்டில் 10 அரசு ஐடிஐகள் தொடங்கியதற்கு, தமிழக முதல்வர், தொழிலாளர் துறை அமைச்சர், அரசு செயலாளர் மற்றும் கூடுதல் இயக்குனருக்கு நன்றி தெரி விக்கப்பட்டது. கூட்டத்தில், டிப்ளமோ படித்து 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கும், மண்டல பயிற்சி இயக்கு நர் பதவி உயர்வு வழங்கும் வகையில், விதிகளை தளர்வு செய்யவேண்டும்.
பயிற்சி துறையில் பதவி உயர்வுகளை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.
என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் ஜெகநாதன், மாதப்பன், மாணிக்கம், மணி, குணசேகரன் மற்றும் முத்துசாமி, சரவணன், மாதேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.