தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழியாததாலும் கர்நாடக மாநிலங்களில் உள்ள கபடி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரின் திறக்கப்படாத ஆளும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீரின் அளவு நாளுக்கு நாள் சரிந்து காணப்பட்டது இந்த நிலையில் கடந்த வாரம் 1200 கன அடியாக நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று வினாடிக்கு 300 கனஅடியாக நீர்வரத்து சரிந்தது இதனை அடுத்து இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பல்வேறு பகுதிகளில் நீர் வறண்டு பாறைகளாக காட்சி அளிக்கிறது நீரின் அளவு சரிந்ததை அடுத்து பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.