பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான ஜி.கே. மணி நேற்று மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாட்டாளி மக்கள் கட்சி தனித்துவம் வாய்ந்த கட்சி, தனிக் கொள்கைகளைக் கொண்ட கட்சியாகும். பண்டைய காலங்களில் இருந்து சித்திரை மாதம் இளவேனிற்காலம் ஆகும். அதை நினைவில் கொண்டு மாமல்லபுரத்தில் மிகப்பெரிய சித்திரை முழுநிலவு மாநாடு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற உள்ளது.
மேலும், தற்போது பேசும் பொருளாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸுக்கு இடையே ஏற்பட்டுள்ள சிறு சலசலப்பு தான். இந்த இரண்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள முழுநிலவு மாநாட்டில் கலந்துகொள்வார்கள். இது பெரிதாக எடுத்துக்கொள்ள ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.