தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரியாறு இங்கு தினசரி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்கள், மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிந்தனர். இதனால் தொங்கும் பாலம், முதலைப் பண்ணை, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மேலும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்தும், பரிசலில் சென்றும் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை உண்ணும் உற்றார் உறவினர்களுடன் மகிழ்ந்தனர்.