வாடகைக்கு காரை விற்பனை செய்து மோசடி நபர்கள் மீது வழக்கு

71பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிட்லகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் பிரபு இவர் சொந்தமாக கார் / வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கானாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வசந்த் கார் டிரைவர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் பிரபு வின் காரை தேர்தல் பணிக் காக வாடகைக்கு வேண்டும் என்று எடுத்துச் சென்றுள்ளார்.

தேர்தல் பணிகள் முடிந்து 3 மாதமாகியும் அவர் காரை திரும்ப கொடுக்காமல் கால தாமதம் செய்துள்ளார். இதை தொடர்ந்து தனது காரை கொடுக்குமாறு வசந்திடம், பிரபு கேட்டும் கொடுக்க வில்லை. இதுகுறித்து பிரபு விசாரித்தபோது வசந்த் மற் றும் காவேரிப்பட்டணம் பகு தியைச் சேர்ந்த நிசான் பாய்
ஆகிய 2 பேரும் காரை திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி பாண்டியன் என்பவ ருக்கு விலைபேசி விற்று மோசடி செய்தது தெரியவந் தது. இந்த மோசடி குறித்து பிரபு பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவலர்கள் மோசடி வழக் குப்பதிவு செய்து வசந்த் மற் றும் நிசான் பாய் ஆகியோரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி