தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அருகே உள்ள எட்டிகுட்டை பகுதியை சேர்ந்தவர் தனபால் இவர் தனது நிலத்துக்கு செல்லும் வழிப்பாதையில் இருந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதற்கு பக்கத்து நிலத்துக்காரான பள்ளிகொண்டான் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே நேற்று மாலை மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இதில் 4 பேருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இன்று பாப்பாரப்பட்டி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.