தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக கருதப்படும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று டிசம்பர் 22 காலை நிலவரப்படி நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கண சுற்றுலா பணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குவிந்தனர். உற்றார் உறவினர்கள், நண்பகளுடன் மெயின் அருவி, சினி ஃபால்ஸ், மற்றும் பரிசலில் சென்றும் அருவிகளில் குளித்தும், மீன் அருங்காட்சியகம் முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர் மேலும் நேற்று ஏராளமான பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்ததால் பேருந்து நிலையம், தொங்கும் பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் கலை கட்டியது