பென்னாகரம் தெ. ஒன்றிய திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைமுகாம்.

667பார்த்தது
பென்னாகரம் தெ. ஒன்றிய திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைமுகாம்.
சந்தை தோப்பு பகுதியில் உள்ள பென்னாகரம் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தை தோப்பு பகுதியில் உள்ள தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மடம். முருகேசன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தினை வழங்கி, கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் பென்னாகரம் பேரூராட்சி தலைவரும் நகர செயலாளருமான வீரமணி, ஏரியூர் ஒன்றிய செயலாளர் என். செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, பொதுக்குழு உறுப்பினர்கள் வேலுமணி, சோலை மணி பென்னாகரம் பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், மாவட்ட பிரதிநிதி பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி