பயிர் கழிவுகளை உரமாக்க வேளாண் அதிகாரி தகவல்

68பார்த்தது
தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில்,
விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில், பயிர் கழிவை தொடர்ந்து எரிப்பதால் மண்ணில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண் ணிக்கை குறையும். மேலும் மண் இழப்பும் ஏற்படும். மண்ணின் வெப்பநிலை கூடுவதால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அழியும்.

மண்ணின் கார்பன்- நைட்ரஜன் சமநிலை குலையும். ஒரு டன் நெல் கழிவை எரிப்பதால் 5. 5 கிலோ தழைச்சத்து 2. 5 கிலோ மணி சத்து, 2. 5 கிலோ சாம்பல் சத்து, 1. 2 கிலோ சல்பர் மற்றும் அங்கக கரிம இழப்பு ஏற்படுகிறது. பயிர் கழி வுகளை மண்ணிலேயே மடக்கி உழ வேண்டும். இவ்வாறு மடக்கி உழுவ தால் மண்ணின் தழை, மணி, சாம்பல் சத்து பண்புகள் மேம்படும். பயிர் கழிவை கொண்டு நிலப்போர்வை அல்லது மூடாக்கு அமைக்கலாம். இதனால், தாவரங்களின் கழிவுகள் எளிதில் மட்கி உரமாக பயன்படுகிறது.

இதே போல் தென்னை நார் கழிவு மற்றும் தழைச் சத்து மூலப்பொருட்களை, ஒன்றன் மேல் ஒன்றாக 4 அடி உயரத்திற்கு எழுப்பு வது நன்று. இந்த கழிவு குவி யலை, 15 நாட்களுக்கு ஒரு முறை கிளறிவிட வேண் டும். மட்க வைத்தலுக்கு உதவும் இந்த மட்கும் உரங்களை பயன்படுத்தும் போது, மண்ணில் சத்துக் கள் நிலை நிறுத்தப்பட்டு பயிர்களுக்கு கிடைத்து, மகசூல் அதிகரிக்க உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி