ஒகேனக்கல்லில் 5000 கனஅடியாக நீர்வரத்து சரிவு

53பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் வரும் கனமழை காரணமாகவும் கர்நாடக மாநில கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் காரணமாகவும் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று 6000 கன அடியாக அதிகரித்து நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 5, 000 கனஅடியாக நீர்வரத்து சரிந்து காணப்படுகிறது. தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பீலிகுண்டுளவில் தொடர்ந்து நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி