இன்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, வத்தல்மலை பகுதியில் உள்ள, பால்சிலம்பு, பெரியூர், பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளை,
நேரில் சென்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு கோவிந்தசாமி அவர்கள் கேட்டறிந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள தார்ச்சாலை மிகவும் பழுதடைந்த நிலையில், பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார் இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.