அரூர் அடுத்த பே. தாதம்பட்டி கூக்கடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராசு (வயது 49). இவர் கடந்த 4 ஆண்டுகளாக அரூர் தி. மு. க. மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இந்த நிலையில் சவுந்தரராசு கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனரை சந்தித்து விட்டு, தனது காரில் வெளியே வந்தார்.
அப்போது பட்டவர்த்தி பெரியார் நகரை சேர்ந்த தி. மு. க. கிளை செயலாளர் ஆறுமுகம் , காரின் குறுக்கே தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தி தகாத வார்த்தையால் பேசி சவுந்தர்ராசுவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்,
இதனையடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய சவுந்தர்ராசுவை தாக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து சமூக வலைத்தளத்திலும் அவர் மீது அவதூறு செய்தியை பரப்பியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஏ. பள்ளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை நேற்று கைது செய்தார்.