லாரி மோதி வாலிபர்கள் காயம்

70பார்த்தது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டவர்த்தி கிராமத் தைச் சேர்ந்தவர் சக்தி (35), மினி டெம்போவில் காய்கறி வியாபாரம் செய்து வருகி றார். நேற்று உறவினரான பறையப்பட்டியை சேர்ந்த ஆனந்தன் (24) என்பவருடன், டெம்போவில் காய்கறியை ஏற்றிக்கொண்டு எருமியாம் பட்டியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, சேலம்- அரூர் சாலையில் அலமேலுபுரம் பகுதியில் பின் னால் வந்த லாரி, மினி டெம் போவின் பின்னால் மோதி யது. இதில் மினி டெம்போ கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதில், இருவருக் கும் பலத்த அடிபட்டது. அங் கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி