தாக்காளி விலை கிடு கிடு உயர்வு

580பார்த்தது
அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர், ஒடசல்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட இடங்களில், 20க்கும் மேற்பட்ட தக்காளி மண்டிகள் செயல்பட்டுவருகிறது. தக்காளியை இப்பகுதி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, பெட்டிகளில் அடுக்கி சென்னை, பெங்களூரு, கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

உள்ளூர் வியாபாரிகளும் மண்டிகளில் இருந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு, 27 கிலோ கொண்ட ஒரு கிரேடு ₹700 முதல் ₹800 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று, விலை உயர்ந்து ஒரு கிரேடு தக்காளி ₹900முதல் ₹1100 வரை விற்பனையானது. சில்லரை விலையில் கிலோ ₹50 முதல் ₹60 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழை காரணமாக‌ தக்காளி விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி