அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

57பார்த்தது
அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
தர்மபுரி மாவட்டம், அரூர் சின்னகுப்பம் மாரி யம்மன் கோயில் அருகே, கடந்த 26ம்தேதி இரவு, ரேஷன் அரிசி பதுக்கி லாரி யில் ஏற்றுவதாக, தர்மபுரி குடிமைப் பொருள் வழங் கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் எஸ்ஐ கிருஷ்ண வேணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தலை மையில் போலீசார் சின்ன குப்பம் விரைந்த போது, அங்கு ரேஷன் அரிசி மூட் டைகளை சிலர் லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்த னர். போலீசாரை பார்த்த தும் தப்பியோட முயன்ற அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும், லாரியுடன் 19, 740 கிலோ ரேஷன் அரிசியை பறிமு தல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, ஓமலூர் குதிரைகுத்திபள்ளம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் முருகேசன் (38), அரூர் சின்னகுப்பம் பகு தியை சேர்ந்த ரகு (34), தர்ம புரி அதியமான்கோட்டை நவீன அரிசி ஆலையின் உரிமையாளர் செல்வ ராஜ்(45), மாது, விஜயன், துரைசாமி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்த னர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பச்சரிசி குருணை யின் உரிமையாளர் சின் னாங்குப்பத்தை சேர்ந்தரகு (34), கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, கோவை மண்டல எஸ்பி சந்தரசேகரன் பரிந்து ரையின் பேரில், சேலம் சரக டிஎஸ்பி விஜயகுமார், தர்மபுரி கலெக்டர் சாந்தியிடம் பரிந் துரை கடிதம் கொடுத்தார். அதை ஏற்று கலெக்டர் சாந்தி, ரகுவை குண்டர் சட்டத் தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்

தொடர்புடைய செய்தி