தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் போச்சம் பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கிருஷ்ணாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் தமிழரசன் உயிரிழந்தார். இந்த விபத்துக்கான காரணம் என்ன.? என்பது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.