தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மிடி அருகாமையில் பைர நத்தத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 3 முறை அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்எல்ஏ கோவிந்தசாமி கலந்து கொண்டார். காவலர்கள் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் பேச்சுவார்த்தை நடத்தி இடமாற்றம் செய்வதாக கூறினர் ஆனால் 6 மாதங்களை கடந்த நிலையில் கடையை மூடாததை எடுத்து ஆவேசமடைந்த மக்கள் நேற்று மாலை டாஸ்மாக் கடை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவலர்கள் பெண்கள் மற்றும் ஆர்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் தற்போது உள்ள மது வகைகளை விற்பனையான பின் ஓரிரு நாளில் டாஸ்மார்க் கடை மாற்றப்படும் என உறுதி அளித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.