தர்மபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து, தாசில்தார் வள்ளி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில்,
அனைத்துறையினரும் பருவ
மழையைவீடுகளில் மழைநீர் புகுந்தால்,
எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவர்களை தங்க வைக்க திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் செல்லாமல் இருக்க, மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மீட்புகுழுவினர் எந்த நேரத்திலும் தயா ராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தலைமையிடத்து
துணை
தாசில்தார் பழனிசாமி, துணை தாசில்தார் கம்ருதீன், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணி, மின்வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.