தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட,
கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து
பி. மோட்டுப்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாக பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தனர் இதனை ஏற்று இன்று அங்கு சென்ற எம்எல்ஏ கோவிந்தசாமி கிராமத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து,
JCB இயந்திரம் வரவழைத்து,
அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு
குடிநீர் வழங்க
புதிதாக பைப்லைன் அமைக்கும் பணியை துவக்கி வைத்து,
விரைவில் குடிநீர் வழங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்,
பின்னர் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தையும் ஆய்வு செய்தார்