இது குறித்து பாமக கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி கே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேட்டூர் அணை முழு கொள்ளளவையும் எட்டிய நிலையில் தண் ணீர் திறக்கப்பட்டுள்ளது. வீணாக கடலுக்கு செல்லும் உபரிநீரை தர் மபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற
நட வடிக்கை எடுக்க வேண்டும். வீணாக கட லுக்கு செல்லும் உபரி நீரை காவிரியில் ஒகே னக்கல் பகுதியில் இருந்து நீரேற்று மூலம் பென் னாகரம் அருகே உள்ள கெண்டையன் குட்டை ஏரியை நிரப்பி விட்டால், தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரம்பி விடும். இதனால் பின்தங்கிய மாவட்ட மான தர்மபுரியில் கிணறுகளுக்கும், ஆழ்துளை
கிணறுகளுக்கும் நீரூற்று பெருகும். விவசாயத்திற் கும், கால்நடைகளுக்கும் தொழிலுக்கும் வாய்ப் பாக அமையும். எனவே தர்மபுரி - காவிரி உபரிநீர் திட் டத்தை உடனடியாக நிறைவேற்ற விரைவான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.