இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

76பார்த்தது
பாப்பிரெட்டிப்பட்டிதாலுகா, பே. தாதம்பட்டியைச் சேர்ந்தவர் வேடியப்பன் (36). இவர் கடந்த
2017ம் ஆண்டு கொடைக்கானலை சேர்ந்த ஜான்திலகர் என்பவரது சகோதரி ரெபேகாள் (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு
முன்பு, வேடியப்பன்கொடைக்கானலில் இருக்கும் ஜான் திலகருக்கு போன் செய்து, எனக்கும், உனது அக்காவுக்கும்தகராறு ஏற்பட்டுள்ளது.
எனவே, நீ பே. தாதம்பட்டி வந்து உனது அக்காவை அழைத்து செல் என கூறி யுள்ளார். அதற்கு ஜான் திலகர், நீங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், உங்கள் பிரச்னையை நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என கூறி யதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து, ரெபேகாள் அவரது சித்திக்கு போன் செய்து, தனது கணவர் தன்னை வேறு ஒருவருடன் தொடர்புபடுத்தி பேசுவ தாக கூறி அழுதுள்ளார். நேற்று வேடியப்பன் ஜான் திலகருக்கு போன் செய்து, ரெபேகாள் வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண் டதாக கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச் சியடைந்த உறவினர்கள், அரூர் அரசு மருத்துவம னைக்கு சென்று, ரெபே காளின் சடலத்தை பார்த்து கதறியழுதனர். பிறகு கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில், ரெபேகாளின் சாவில் மர்மம் இருப்பதால், உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார ளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி