தருமபுரி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் , காவல் நிலையம் அருகில் மற்றும் இபி ஆபிஸ் செல்லும் வழி ஆகிய இடங்களில் பாப்பிரெட்டிப்பட்டி அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆணைக்கிணங்க , பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழா பேரூர் செயலாளர் தங்கராஜ், பேரூர் தலைவர் சதீஷ், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பசுமைத்தாயக மாவட்ட தலைவர் அருள் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பொறுப்பாளர் பன்னீர்செல்வம் , மாவட்ட துணை செயலாளர், வெங்கடேஷ் நாயுடு, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜன், பசுமைத்தாயக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், அமைப்புச் செயலாளர் அமுல் , பொருளாளர் ராஜலட்சுமி மகளிர் அணி தலைவி மணிகண்டன் சின்னத்தம்பி காளி பேட்டையான் என்கிற பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.