பாப்பிசெட்டிபட்டியில் விசிக சார்பில் தேர்திருவிழா

57பார்த்தது
பாப்பிசெட்டிப்பட்டி மற்றும் அன்னை அஞ்சுகம் நகர் ஆகிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் இந்த தேர்தலில் கட்சிக்கு மாநில அங்கீகாரம் கிடைத்ததை கொண்டாடும் வகையில் இன்று அப்பகுதி சேர்ந்த கிராம மக்கள்
மாவிளக்கு எடுத்து அம்பேத்கர் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோரின் உருவப்படம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாள இசை முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இதில் விசிக தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி கே சாக்கன் சர்மா கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியினை ஏற்றி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மக்களோடு மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதில் பாப்பி செட்டிப்பட்டி மற்றும் அஞ்சுகம் நகர் மற்றும் அரூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விசிக நிர்வாகிகள் உடன் இருந்தனவிசிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி