தர்மபுரி: வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

69பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த நத்தமேடு பகுதியை சேர்ந்த மாதம்மாள் மாதேஷ் தம்பதியினரின் மகள் அஞ்சலி இவர் தங்கமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் திருமணம் ஆனதிலிருந்து வரதட்சணை கேட்டு கணவர் தங்கமணி மற்றும் அவர்கள் பெற்றோர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும் இதனால் வாழ முடியாமல் தாய் வீட்டில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக வசித்து வருவதாகவும் தொடர்ந்து மாமியார் நாத்தனார் மற்றும் கணவர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வருவதாகவும் ஒவ்வொரு முறையும் தன்னை கணவரிடம் சேர்த்து வைக்கும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் பல முறை விசாரணை செய்து பேசி சமரசம் செய்து அனுப்பி வந்தாலும் தொடர்ந்து வரதட்சனை கொடுமை நடந்து வந்ததால் மன நொடிந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது தந்தையுடன் தற்கொலை செய்ய வந்ததாகவும் தெரிவித்தார். இளம்பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கம் என்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி