தர்மபுரி: பிடிஓ அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை போராட்டம்

53பார்த்தது
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சிகளுடன் ஒரு சில ஊராட்சிகளையும் மற்றும் பேரூராட்சிகளுடன் ஒரு சில ஊராட்சிகளையும் இணைப்பதாக அறிவிப்பு ஆணையை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில், நேற்று மாலை வெங்கட சமுத்திரம் ஊராட்சியை பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி