தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடத்தூர் தண்டாயுதபாணி திருமண மண்டபத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜூன் 14ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மதச்சார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி பேரணி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த பேரணியில் கலந்துகொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் மேல்நிலைப் பொறுப்பாளர்கள் செந்தமிழ், சுபாஷ், சந்திரபோஸ், நாவரசு ஆகியோர் முன்னிலையில் டிஜிட்டல் பேனர் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்குதல், மற்றும் பல்வேறு கட்சி ஆக்கப்பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.