தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் வெங்கடகரதஅள்ளி ஊராட்சி வே. புதூரில் பழங்குடியினர் சார்பாக வன உரிமை கிராம சபை கூட்டம் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளார் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார் புதியதாக வனக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் வனக்குழு தலைவராக விஜயராஜ், செயலாளராக சௌந்தரராஜன் தேர்வு செய்யப்பட்டனர் இதில் ஊராட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் இதில் பங்கேற்றனர் இறுதியாக அசோக்குமார் நன்றி கூறினார்.