தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடங்கிய சுகாதாரத் துறை மருத்துவர்களுடனான ஆய்வுக் கூட்டம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தலைமையில் நேற்று (மார்ச் 20) மாலை நடைபெற்றது.
அப்போது தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், மாவட்ட பொது மக்களிடையே குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை விளக்கும் வகையில், தற்காலிக கருத்தடை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சை முறைகள் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று தெரிவித்தார்.
தொழுநோய் ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு, பாலின விகிதம் (Sex Ratio), High Order Birth, மகப்பேறு இறப்பு உள்ளிட்ட பொருண்மைகள் குறித்து வருகின்ற 29.03.2025 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் துறைத் தலைவர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
மேலும், அரசு மருத்துவமனைகள் சிறந்த முறையில் செயல்பட்டு பொதுமக்களிடையே நற்பெயர் பெறவும், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் செயல்படவும், மருத்துவமனை வளாகத்தினை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தெரிவித்தார்.