தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வே முத்தம்பட்டி வனப்பகுதியில் சுயம்புவாக தோன்றிய அருள்மிகு காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது இங்கு தினசரி சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறும் நிலையில் இன்று வைகாசி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு காலை முதலே நெய் அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து துளசி மாலையில் பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார் இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நீண்ட நெடும் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தினர் அன்னதானம் வழங்கினர்.