தர்மபுரி: தார் சாலை அமைத்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை மனு

73பார்த்தது
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சோலை கொட்டாய் அடுத்து வெள்ளோலை கிராம மக்கள் தார் சாலை அமைத்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது வெள்ளோலை பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அத்திமா நகர் முனியப்பன் கோவில் வரை தார் சாலை அமைத்து தர வேண்டுமென கடந்த ஆண்டு 23. 7. 2024 அன்று பிடிஓ அவர்களிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். நேரில் பிடிஓ அவர்களிடம் கூறியும் இதுவரை எதையும் செய்யவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எங்கள் பகுதியை நேரில் ஆய்வு செய்து தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி