தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் தென்கரைக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் சமீப நாட்களாக மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. அலுவலக வளாகத்தில் தினந்தோறும் ஆங்காங்கே காலி மதுபாட்டில்கள் காணப்பபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஏப்ரல் 15 காலை அலுவலகம் திறக்கும் முன்பு மது பாட்டில்கள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இது போன்ற அவல நிலை தொடாமல் இருக்க நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.