தர்மபுரி: ஒண்டி ஆலமரத்து முனியப்பன் கோவில் விழா

69பார்த்தது
தர்மபுரி அடுத்த சோலைக் கொட்டாயில் உள்ள ஸ்ரீ ஒண்டி ஆலமரத்து முனியப்பன் கோவில் சித்திரை திருவிழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி பூஜையும், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் மற்றும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நேற்று ஏப்ரல் 14 நடைபெற்றது. விழாவின் ஸ்ரீ ஒண்டி ஆலமரத்து முனியப்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அலங்கார சேவையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து சோலைக்கொட்டாய் ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பு பூஜை மற்றும் கிடா வெட்டுதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு எடைக்கு எடை நாணயங்கள் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி