தர்மபுரி: பிஎஸ்ஏ கல்லூரியில் புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா

59பார்த்தது
தருமபுரி பி. எஸ். ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் புதிய நிர்வாகக் குழுவின் கீழ் இயக்கப்பட உள்ளது. அதன்படி இக்கல்வி ஆண்டிற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் பொ. சண்முக வடிவேல் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் செல்வி ச. பிரீத்திஸ்ரீ அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் க. சங்கர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் சி. வடமலை அவர்கள் இக்கல்வியாண்டிற்கான திட்டங்களை விளக்கினார்.

இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராகத் தருமபுரி அரசு கலைக்கல்லூரி, கணினிப் பயன்பாட்டியல் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் ச. சிலம்பரசன் அவர்கள் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டு இடம்பெறும் நிகழ்வுகள், மற்றும் செயல்படுத்தப்பட இருக்கும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாணவ, மாணவியருக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்த இந்நிகழ்வில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் மேலும் இந்த நிகழ்வில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி