தர்மபுரி: வளர்ச்சி திட்ட பணிகளுக்கு எம்எல்ஏ பூமி பூஜை

59பார்த்தது
தர்மபுரி: வளர்ச்சி திட்ட பணிகளுக்கு எம்எல்ஏ பூமி பூஜை
தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கடசமுத்திரம், அதிகாரப்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக, சுகாதார வளாகம், நியாய விலைக் கடை கட்டிடம், ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்வு ஜனவரி 02 இன்று நடைபெற்றது. இதில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கலந்து கொண்டு பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், ஒப்பந்ததாரர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி