தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் கற்பிக்கும் முறையை மாணவர்களுடன் அமர்ந்து கவனித்தார். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் அதிமுக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல உடன் இருந்தனர்.