தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மக்களவைத் தேடி மருத்து ஊழியர்களுக்கு நேரம் வேலை வரைமுறை படுத்த கோரி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்களைத் தேடி மருத்துவ தன்னார்வலர்களை பணிக்கு அமர்த்தப்பட்ட போது 2 மணி நேர வேலை என்றும் நாள் ஒன்றுக்கு 20 வீடுகளை பார்வையிட்டு இரத்தழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களை கண்டறிந்து சுகாதாரத் துறைக்கு விபரங்களை சேகரிப்பதுடன் மருந்து பெட்டகம் வழங்கும் பணி கொடுக்கப்பட்டது.
இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 5500 மட்டும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மக்களைத் தேடி மருத்துவ தன்னார்வலர்கள் தற்போது நாள் முழுவதும் எம்எல்எச்பி, விஎச்என், பணி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயளிகள் பார்க்கும் பணி, கர்ப்பிணிகள் விவரம் பற்றிய பணி என பல்வேறு திட்டப்பணிகளை இவர்களிடம் கொடுக்கப்படுகிறது.
மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும். சீருடை, அடையாள அட்டை,
குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26, 000 வழங்கவேண்டும். பிரதி மாதம் 5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கவேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் கோகிலா தலைமை வகித்தார். பொருளாளர் பழனியம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.