தர்மபுரி: மு. அமைச்சர் தலைமையில் முதல்வர் பிறந்த நாள் விழா

84பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி சார்பில் முதல்வர் மு. க. ஸ்டாலினின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று மார்ச் 12, பாப்பிரெட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி, கவுன்சிலர்கள் கேமலா முல்லை முருகன், தமிழ்ச்செல்வி சக்தி, கிளை செயலாளர் சுந்தரம், ராமமூர்த்தி ஆகியோர் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணியை அன்னதானம் வழங்கினார். அதனை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் விடுதியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திமுக மாணவர் அணி சார்பில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சதா. சுர்ஜித் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் முன்னிலையில் நடந்த பிறந்த நாள் விழாவில் மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் கலந்துகொண்டு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பித்தார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி