தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் பகுதியில் இன்று ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ஜூன் 11 நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறிப்பாக டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றால் கருத்தில் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சமாக 1500 ரூபாயும் ஓட்டுனருக்கு படிக்காசாக 300 ரூபாய் என மொத்தம் 1800 ரூபாய் வழங்க வேண்டும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் ஏராளமானோர் இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.