தர்மபுரி மாவட்டத்தில் 833 தொடக்கப் பள்ளிகளும் 322 நடுநிலைப் பள்ளிகளும் 118 உயர்நிலைப் பள்ளிகளும் 108 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் 1381 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 17 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 210 தனியார் பள்ளிகளும் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. கடந்த கல்வி ஆண்டு நிறைவடைந்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் தற்போது இன்று முதல் புதிய கல்வியாண்டில் மாணவ மாணவிகள் கல்வி பயில ஆர்வத்துடன் வருகை புரிந்தனர்.
தர்மபுரி ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆயிரக்கணக்கான மாணவிகள் ஆர்வத்துடன் கல்வி பயில வருகை புரிந்தனர். இந்த மாணவிகளை ஆசிரியர்களும் ஆர்வத்துடன் வரவேற்றனர். புதிய கல்வி ஆண்டில் அனைத்து மாணவ மாணவிகளும் சிறந்த முறையில் கல்வி பயின்று சிறந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று ஆசிரியர்கள் வாழ்த்தினர்.